நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மெகராஜ் இன்று பதவியேறுள்ளார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்டோர் பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாமக்கல் மாவட்ட மக்களே உழைப்பாளர்கள். அவர்கள் செயலே அரசு அலுவலர்களை ஊக்கப்படுத்தி பணிகளை சிறப்பாகச் செய்ய உதாரணமாக இருக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு நாமக்கல்லில் நான் திட்ட அலுவலராக பணியாற்றியிருக்கிறேன்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பயிற்சி பெற்று, வேலூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியுள்ளேன். இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாமக்கல் மாவட்ட மக்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு பேசினார்.
இதையும் படிங்க:
'பொது பிரச்னைகளுக்கு மக்கள் எந்த நேரமும் அணுகலாம்' - புதிய மாவட்ட ஆட்சியர் தகவல்!