இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான நவராத்திரி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாள்களில் துர்கை அம்மனையும், அடுத்த 3 நாள்களில் லட்சுமி தேவியையும், இறுதி 3 நாள்களில் சரஸ்வதி தேவியையும் வழிபடுவார்கள்.
விழாவின் 9ஆவது நாளான வரும் 25ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், பத்தாம் நாளான அக்டோம்பர் 26ஆம் தேதி ஆயுத பூஜையும் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் வீடுகளிலும், கோயில்களிலும் கொலு வைத்து ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் வழிபடுவர். இந்தக் கொலுவில் ஆறுபடை வீடு, தசாவதாரம், சீதா ராமர் திருக்கல்யாணம், கண்ணனின் லீலை என பல கடவுள் உருவங்கள் பொரித்த பொம்மைகள் இடம் பெறும்.
கரோனா பரவலுக்கு மத்தியில் நவராத்திரி வந்தாலும் கொண்டாடத்திற்கு ஒன்றும் குறையில்லை. ஆனால் பக்கத்து வீட்டிற்கும், கோயிலுக்கும்தான் கொலுப் பார்க்க போக முடியாது எனத் தெரிவிக்கிறார் நாமக்கல் இல்லத்தரசி.
வழக்கம் போல் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா நடைபெறும் நிலையில் இவ்வாண்டு ஐப்பசி மாதம் கொண்டாட உள்ளதாகவும், கரோனாவால் இவ்வாண்டு குழந்தைகள் வீட்டிலே உள்ளதால் அவர்கள் அதிகளவு கொழு பொம்மைகளை வைக்க விரும்புவதாக கூறுகிறார் இல்லத்தரசி விஜயலட்சுமி வெங்கட்ராமன்.
கரோனா பரவலால் மாஸ்குடனான கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி பொம்மைகளும் முறையான பாதுகாப்புடன் தான் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தபோதிலும், கரோனா பரவல் காரணமாக இந்தாண்டு கொலு பொம்மை விற்பனை மந்தமாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார் விற்பனையாளர்.
இது குறித்து கொலு பொம்மை விற்பனையாளர் அசோக்குமார் கூறுகையில், “கரோனா தொற்றுப் பரவலால் விற்பனை எவ்வாறு இருக்குமோ என்ற அச்சம் உள்ளது. அதனால் குறைந்த அளவிலேயே பொம்மைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அளவில் விற்பனை குறைவாகதான் உள்ளது. இன்று நவராத்திரி கொலு தொடங்குவதால் இன்னும் ஓரிரு நாள்களுக்கு மட்டும் விற்பனையை எதிர்பார்க்க முடியும். “ என்றார்
பாதுகாப்பான வழிமுறைகளோடு விழாக்களை கொண்டாடினால் எப்போதும் கொண்டாட்டம் தான். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றமால் கொண்டாங்கள் இடம்பெருமாயின் குடும்பத்தில் திண்டாட்டம்தான்.
இதையும் படிங்க...நவராத்திரி விழா: கங்கனா வாழ்த்து