நாமக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் அடுத்துள்ள சின்ன வேப்பநத்தம் பகுதி அருகே டாடா சுமோவும் செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், டாடா சுமோவில் இருந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் காட்டுப்புத்தூருக்கு டைல்ஸ் ஒட்டச் சென்றுவிட்டு நாமக்கல் திரும்பும்போது இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதில், காரை ஓட்டி வந்த சசிகுமார், பிகாரைச் சேர்ந்த தர்மா, பப்லு, குமார், சதீஸ் உள்ளிட்ட ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்ட காவல் துறையினர் அப்பளம்போல் நொருங்கியிருந்த காரிலிருந்து உயிரிழந்தவர்களின் உடலை வெளியே எடுத்து உடற்கூறாய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முன்னே சென்ற வாகனங்களை லாரி முந்திச் செல்ல முயன்றதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: டிராக்டர் - லாரி மோதி விபத்து: 11 பேர் படுகாயம்