சென்னை ஆவடி அருகேயுள்ள வீராபுரத்தில் 46ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி, 12ஆவது தென் மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் நாமக்கல் சூட்டிங் அகாதமியைச் சேர்ந்த 12 பேர் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டனர்.
![shooting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-03-sports-shooting-gold-medal-script-vis-tn10043_20032021185038_2003f_1616246438_319.jpg)
இதில் 25 மீட்டர் பிஸ்டல் சீனியர் பிரிவில் (ISSF) தனித்திறன் போட்டியில் ராகவி தங்கப்பதக்கம் வென்றார். இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோல் இவரது சகோதரியான ரசிகாவும் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார். இவர்கள் இருவரும் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
![shooting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-03-sports-shooting-gold-medal-script-vis-tn10043_20032021185038_2003f_1616246438_780.jpg)
தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதிப்பெற்ற சகோதரிகளான ராகவி, ரசிகாவை, நடிகரும், துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற அஜித்குமார் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகவி கூறுகையில், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்வதோடு எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு எனத் தெரிவித்தார்.