மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சுமதி, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள தும்மலாம்பட்டியைச் சேர்ந்த குமாரின் மகன் தங்கராசு(21), அவரது அத்தை மகளான 15 வயது சிறுமியை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் முடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதில் அவருக்கு கடந்த 28ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக தங்கராசுவை கைது செய்த காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது