நாமக்கல்லில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னை வானிலை மையம் தகவலின்படி நாமக்கல்லில் மட்டும் நேற்று முன்தினம் 100 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகி இருந்தது. மேலும், பகல் நேரங்களில் அனல் காற்றும் வீசியது. வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் நாமக்கல்லில் ஆலங்கட்டி மழை பெய்தது. தரையில் விழுந்த ஆலங்கட்டியை பொதுமக்கள் கையில் எடுத்து மகிழ்ந்தனர்.