அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். அதன் பின்பு கரோனா நிவாரணமாக தான் வழங்கிய நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் அவரது வீட்டிற்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் குற்றஞ்சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் பயணியர் மாளிகையில் அவரது ஆதரவாளர்களுடன் மதிய உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கரும், அவரது ஆதரவாளர்களும் தாங்கள் முறையாக மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் நிலையில் சின்ராஜ், பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும், முறைகேடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி, ஆய்வாளர் பொன். செல்வராஜ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், "நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவரது ஆதரவாளர்களுடன் வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். அவர் தூண்டுதலின் பேரிலே தான் இன்று அதிமுகவை சேர்ந்த பெண்கள் என்னை முற்றுகையிட முயற்சித்தனர். அவர் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொள்வதினால் அவருக்கு வாக்களித்த மக்களிடையே அவப்பெயர் ஏற்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தள்ளுவண்டிக் கடைகளை அப்புறப்படுத்திய காவல் துறை: வாக்குவாதத்தில் வியாபாரிகள்!