நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு 664 பேர் விண்ணப்பம் அளித்திருந்ததாகவும் அவர்களில் 650 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்தார்.
அதே நேரத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.