ETV Bharat / state

நாமக்கலில் ரூ.7லட்சம் கடனுக்காக வீடு ஜப்தி?

நாமக்கல்: பொய்யேரிக்கரை சாலை அருகே கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய சென்ற வங்கி ஊழியர்கள், வீட்டில் ஆள் இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பியுள்ளனர்.

நாமக்கலில் ரூ.7லட்சம் கடனுக்காக வீடு ஜப்தி?
author img

By

Published : May 21, 2019, 5:56 PM IST

நாமக்கல் மாவட்டம், பொய்யேரிக்கரை சாலை அருகே மதுரவீரன் காலனியை சேர்ந்தவர் விஜயா. இவர் தனது மாடி வீட்டை 1980ஆம் ஆண்டு அடகுவைத்து நாமக்கல் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 லட்சம் ரொக்கமாக பணம் பெற்றிருந்தார்.

கடனை அவரால் திருப்பிக் கட்ட முடியாததால், பணத்தை திரும்பப் பெற வங்கி சார்பில் 2011ஆம் ஆண்டு வீடு ஏலத்தில் விடப்பட்டது. அந்த வீட்டை, அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவர் ஏலம் எடுத்திருந்தார்.

namakkal for 7 lakh loan amount house is sealed?
நாமக்கலில் ரூ.7லட்சம் கடனுக்காக வீடு ஜப்தி?

இதனையடுத்து ஏலத்தில் எடுத்த ஆண்டிலிருந்து இதுவரை வீட்டின் உரிமையாளர் விஜயா வீட்டை காலி செய்யாததால் இன்று வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் மற்றும் வங்கி அலுவலர்களுடன் வீட்டை ஜப்தி செய்ய காவல்துறையினருடன் வந்திருந்தனர். அப்போது விஜயாவின் மகள் மட்டும் வீட்டில் இருந்ததால், ஜப்தி நோட்டீஸை வீட்டின் சுவரில் ஒட்டிவிட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டை காலி செய்யாவிட்டால் ஜப்தி செய்யப்படும் என்று அவர் மகளிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளனர்.

நாமக்கலில் ரூ.7 லட்சம் கடனுக்காக வீடு ஜப்தி?

Intro:நாமக்கல் அருகே 7 லட்சம் மதிப்பிலான வீட்டு கடன் கட்டாததால் ஜப்தி

Body:நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ளது பொய்யேரிக்கரை. இங்கு உள்ள மதுரவீரன் காலனியில் விஜயா என்பவர் தன்னுடைய மாடி வீட்டை 1980ஆம் ஆண்டு அடகுவைத்து நாமக்கல் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தில் 7 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து அவர் அந்த கடனை திருப்பிக் கட்டாத நிலையில் கடனுக்கான வட்டி அதிகமாக வந்ததாகவும் வங்கி சார்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வீட்டை வங்கி சார்பில் ஏலம் விட்டனர். இந்த ஏலத்தை அப்பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவர் ரூபாய் 7 லட்சம் ரூபாய் கட்டி ஏலத்துக்கு எடுத்துள்ளார்.

இதனையடுத்து ஏலத்துக்கு எடுத்த ஆண்டிலிருந்து இதுவரை வீட்டின் உரிமையாளர் விஜயா வீட்டை காலி செய்யவில்லை. இந்த நிலையில் வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் வங்கி அதிகாரிகளுடன் இன்று மதுரை வீரன் காலனியில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டை காலி செய்ய போலீசார் உடன் வந்தனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு கருதி போலீசார் பலர் குவிந்திருந்தன. பிறகு விஜயா மகள் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் அவரிடம் வீட்டின் ஜப்தி நோட்டீஸ் ஒப்பந்த கையெழுத்திட்டு சுவரில் ஒட்டி சென்றுள்ளனர்.

ஓரிரு நாட்களில் வீட்டை காலி செய்யாவிட்டால் அரசு அதிகாரிகள் துணையுடன் காவல் துறை மூலமாக வீட்டை காலி செய்யப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.

சுமார் 7 லட்சம் மதிப்பிலான வீட்டை கடந்த 20 ஆண்டுகளாக வீட்டின் உரிமையாளரே கடனை கட்டாமல் அபகரித்து வைத்திருந்த நிலையில் வீட்டை காலி செய்ய வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.