நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 4299 முதல் ரூ. 5110 வரையிலும் சுரபி இரகம் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 5191 முதல் ரூ. 5650 வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது.
ஏலத்தில் 2250 பருத்தி மூட்டைகள் 35 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலை கடந்த வார விலையை விட கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் இது தங்களுக்கு சற்று மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஏலத்தில் சேலம், மகுடஞ்சாவடி, திருப்பூர், ராசிபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்திகளை கொள்முதல் செய்தனர்.