ETV Bharat / state

நாமக்கல்லில் மேலும் 5 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா உறுதி

நாமக்கல்லில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

namakkal  corona  positive  five  covid19  nurse  cpeani  நாமக்கல் கரோனா பாதிப்பு  கரோனா உறுதி  Namakkal Corona Positive
Namakkal Corona Positive
author img

By

Published : Apr 17, 2020, 11:31 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், மூன்று பேர் டெல்லி சமய மாநாட்டிற்கு சென்றுவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஒரு செவிலியும், ஒரு தூய்மைப் பணியாளரும் அடங்குவர்.

கடந்த 13ஆம் தேதி லத்துவாடி பகுதியைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணை பரிசோதனை செய்த கிராம சுகாதார செவிலி, அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பெண் ஆகிய இருவரிடமும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்தனர்.

அதில், இரு பெண்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக சுகாதாரத் துறையினர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரோனா பதிக்கப்பட்ட பகுதி

இதைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள், யாருடன் அதிகம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியினை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அப்பகுதி முற்றிலும் முடக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இன்றைய நிலையில் எங்கு இருக்கிறது கரோனா? - முழு விபரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.