நாமக்கல் மாவட்டம் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை பாப்பாத்தி வேலைக்குச் சென்றார். அப்போது, திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அருகேயுள்ள சாலையை கடக்க முயன்றார்.
அந்த நேரம் அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பாப்பாத்தி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துரையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் தனியார் பேருந்தை பறிமுதல் செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நீட் ஆள்மாறாட்டம் - மேலும் ஒரு மாணவர் தந்தையுடன் கைது!