கோழி எரு, பயன்படுத்த இயலாத அழுகிய பழங்கள், கால்நடைகளின் சாணம் ஆகியவற்றிலிருந்து பயோ கேஸ் உற்பத்தி செய்து, அதனை வாகன எரிபொருளான மீத்தேனாக உற்பத்தி செய்யும் வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் பகுதியில் 25 கோடி ரூபாய் செலவில் 2.4 மெகாவாட் திறன் கொண்ட இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முதலாக இயற்கை எரிவாயுவில் இருந்து, Compressed Bio Gas (CBG) தயாரிக்கும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பில் இயந்திரங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவை புதுச்சத்திரம், நாமக்கல், ராசிபுரம், சேலம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய இந்திய ஆயில் கார்ப்ரேசன் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புதிய இயந்திரங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகிய இருவரும் இணைந்து காணொலி மூலம் இன்று திறந்துவைத்தனர்.
இதன்மூலம் வாகனங்களில் எல்பிஜி எரிவாயுவிற்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு 15 டன் Compressed Bio Gas (CBG), 20 டன் உயிரி உரம் ஆகியவை தயாரிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க : தந்தை மகன் உயிரிழப்பு: 'லாக் அப்' சந்தேகங்களுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்