நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரான காளியப்பன் தனது ஆதரவாளர்களுடன் பேட்டை பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்கும் பொருட்டு துண்டறிக்கை விநியோகம் செய்துக் கொண்டிருந்தப் போது, அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள், அவரை நோக்கி ' பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நீங்கள் இங்கு ஒட்டு சேகரிக்க வரக் கூடாது! வெளியே செல்லுங்கள்' என்று அவரிடம்
வலியுறுத்தினர்.
இதனால் அதிமுகவினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியதால், நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்து, அதிமுக வேட்பாளர் காளியப்பனை அந்த இடத்தைவிட்டு அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு பின்னர் அமமுக நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான ஆதரவாளர்கள் வாக்கு கேட்டு நோட்டீஸ்களை கொடுக்க முயன்றனர். அப்போழுது காவல்துறையினர் அவர்களையும் இடத்தைவிட்டு அப்புறப்படுத்தினர்.