நாமக்கல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் வேலுசாமி தலைமையிலான காவலர்கள் சேலம் சாலை, முருகன் கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 20 கிலோ எடை கொண்ட 15 மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 300 கிலோ கஞ்சாவை லாரியுடன் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். மேலும் லாரியை ஓட்டிவந்த சேலம் மாவட்டம், பெத்தநாய்க்கன்பாளையம், ஏரிவலவைச் சேர்ந்த பழனி (55), அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (34) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் வேலையிழந்த இளைஞர் செல்போன் பறிப்பில் கைது!