ETV Bharat / state

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள ரவுடி - பட்டப்பகலில் சரமாரி கத்திக் குத்து

நாமக்கல்: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder attempt from unknown persons for Rowdy involved in various criminal cases

author img

By

Published : Aug 14, 2020, 10:38 PM IST

நாமக்கல் நகராட்சி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் காசி. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.‌ இவர் இன்று காலை வழக்கம் போல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மாசணியம்மன் கோயிலில் சாமி கும்பிட இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் ரவுடி காசியை கத்தியால் மார்பு உள்ளிட்ட பகுதியில் குத்தியுள்ளனர்.

இதனைக் கண்ட கோயிலிலிருந்தவர்கள் கூச்சலிடவே, மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். படுகாயமடைந்த ரவுடி காசியை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடிக்கு பட்டப்பகலில் சரமாரி குத்து

முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல் துறையினர், டி.எஸ்.பி காந்தி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். முன்விரோதம் காரணமாக காசி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா, ரவுடி கும்பலுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை முயற்சி நடைபெற்றதா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் மகளைக் கொலை செய்த தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.