நாமக்கல்: போக்குவரத்து காவல்துறையினர் தினசரி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் நகர காவல் நிலையம் அருகே திருச்சி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் நகராட்சி பணியாளரான கந்தசாமி என்பவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர் தலைகவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்துள்ளனர்.
அப்போது அவர் தான் நகராட்சி பணியாளர் என்றும் தன்மீது எவ்வாறு வழக்கு பதிவு செய்வீர்கள் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் கந்தசாமி மீது தலைகவசம் இன்றி வாகனத்தை இயக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் போக்குவரத்து காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
அபராதத்தை கட்டி விட்டு சென்ற கந்தசாமி, ஆத்திரத்தில் நாமக்கல் போக்குவரத்து காவல் நிலையம் முன்பு, நகராட்சி வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி சென்றார். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
இதையும் படிங்க: ஓசியில் மீன் கேட்டு போலீசார் தொல்லை என ஆட்சியரிடம் புகார்.. காவல்துறை விளக்கம் என்ன?