தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்ம கோயிலில் சாமி இன்று (செப்டம்பர் 11) தரிசனம் செய்தார். கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து பட்டாட்சியர்கள் அமைச்சருக்கு எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்" உலகளவில் மிக பிரமாண்டமான முறையில் கால்நடை பராமரிப்பு துறையின், கால்நடை பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாமக்கல்லில் ஏற்கனவே கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையம் உள்ளது.
நாமக்கல்லை தனிமண்டலமாக அமைக்க கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை மனு வைத்துள்ளனர். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் பகுதியில் கோழி இன ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் இந்தாண்டிற்குள் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.