நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், லாரி ஓட்டுநர்களுக்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வெளிமாநிலங்களுக்குச் சென்றுவந்த லாரி ஓட்டுநர்களை தனிமைப்படுத்துதல், லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பது, புதிய நபர்களை லாரியில் ஏற்றக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 22 ஆயிரம் லாரி ஓட்டுநர்களுக்கும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வெளிமாநிலங்களுக்குச் சென்றுவந்த லாரி ஓட்டுநர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இரண்டாயிரத்து 500 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கான மாதிரிகளை சேகரிக்கும் மருத்துவ உபகரணங்களை (Test Sample Vials) தனியார் தொண்டு நிறுவனத்தினர், அமைச்சர் தங்கமணியிடம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, ”நாமக்கல் மாவட்டத்தில் கரோனா கட்டுக்குள் உள்ளது. இதுவரை மூன்றாயிரத்து 501 பரிசோதனைகள் மேற்கொண்டதில், 61 நபர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூரண மதுவிலக்கு என்பதே அரசின் கொள்கை முடிவு. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க:‘படிப்படியான மதுவிலக்கு என்ன ஆனது?’ - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி