நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
தற்போது பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை. ஆன்லைன் கல்வி தொடங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.