நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை, மக்கள் நல்வாழ்வு, பொது சுகாதாரத்துறைகளின் சார்பில் மாவட்ட சமூக நலத்திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் பாலினத்தை அதிகரித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சமூகநல, சத்துணவுத் துறை அமைச்சர் மருத்துவர். சரோஜா சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரத்துறைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின் அவர், பெண் குழந்தைகளை கருவிலே அழிப்பதை தொடர்ந்து கண்காணித்து முற்றிலும் அதை தடுத்து பெண் பாலின விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: தாயாரின் திதிக்காக தாழ்த்தப்பட்ட பெண்ணுடன் திருமணம்: ஒரே மாதத்தில் பிரிந்த கணவன்