நாமக்கல் மாவட்டம் லத்துவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரப்பன். இந்நிலையில் இவர் இன்று மாலை மோகனூர் அசலபதீஸ்வரர் கோயில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்த போதும், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மோகனூர் காவல்துறையினர், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அரக்கோணத்தில் இளைஞர் வெட்டிக் கொலை