ETV Bharat / state

'பாடை ஊர்வலம், தலையில் ரத்தக்கட்டு' - 108 ஆம்புலன்ஸுக்காக நூதனப் போராட்டம்!

நாமக்கல்: எலச்சிபாளைத்தில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடை கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

m communist protest
author img

By

Published : Nov 7, 2019, 11:36 PM IST

Updated : Nov 8, 2019, 10:34 AM IST

திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை மையமாகக் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் செயல்பட்டுவந்தது. இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு அவசர கால மருத்துவ வசதி கிடைத்துவந்தது.

இந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூன்று மாதங்களுக்கு முன்பு, குமாரமங்கலத்தை மையமாகக் கொண்டு செயல்படும்படி மாற்றியமைக்கப்பட்டது. இதனால், எலச்சிபாளையம் அதனைச் சுற்றியுள்ள 30 கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.

இதனால், இப்பகுதி மக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கிவந்த இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் எலச்சிபாளைத்தை மையாகக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடை கட்டியும் தலையில் கட்டுகட்டியும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் வாசிங்க: 'என்னை நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்' - நிரவ் மோடி மிரட்டல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் கந்தசாமி தலைமையில் நடந்த போராட்டத்தில் எலச்சிபாளையம் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நூதன போராட்டம்

எலச்சிபாளையம் கட்சி அலுவலகத்திலிருந்து ஒரு பாடை கட்டி, அதில் சடலம் போல் ஒரு உருவ பொம்மையை வைத்து மாலை அணிவித்து பறை அடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தபடியும் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம்வரை தூக்கிவந்தனர்.

ஆண்களும் பெண்களும் தலையில் ரத்தக்காயக்கட்டு போட்டபடி ஊர்வலமாக வந்தனர். பேருந்து நிறுத்தம் அருகே பாடையை வைத்து அவர்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை மையமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடைகட்டி நூதன போராட்டம்Body:திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை மையமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடைகட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை மையமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக எலச்சிபாளையத்தை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் செயல்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதியை சார்ந்த கிராம மக்களுக்கு அவசர கால மருத்துவ வசதி கிடைத்து வந்தது. இதை கடந்த 3 மாதங்களுக்கு முன் குமாரமங்கலத்தை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் இயங்கும்படி மாற்றப்பட்டது. இதனால் எலச்சிபாளையம் அதனை சுற்றி உள்ள 30 கிராமக்களுக்கு அவசர தேவைக்கு வருவது என்றால் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல இயலவில்லை எனவும் இதனால் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாகவும் எனவே கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடைகட்டியும் தலையில் ரத்தகாய கட்டுகட்டியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் கட்சி அலுவலகத்தில் இருந்து ஒரு பாடை கட்டி அதில் பிணம் போல் ஒரு உருவ பொம்மையை வைத்து மாலை அணிவித்து தப்பட்டை அடித்தும் பெண்கள் ஒப்பாரி வைத்த படியும் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் வரை தூக்கி வந்தனர். ஆண்களும் பெண்களும் தலையில் ரத்தகாயம் போல் கட்டு போட்டப்படி ஊர்வலமாக வந்தனர். பேருந்து நிறுத்தம் அருகே பாடையை வைத்து ஆண்களும் பெண்களும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Conclusion:
Last Updated : Nov 8, 2019, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.