நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம் திருவிழா, கடந்த மாதம் 28ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை இக்கோயிலின் முக்கியத் திருவிழாவான அக்னி குண்ட திருவிழா தொடங்கியது.
சுமார் 60 அடி நிலமுள்ள அக்னி குண்டத்தில், முதலில் கோயில் பூசாரி தனது குடும்பத்துடன் இறங்கினர். அவரைத் தொடர்ந்து குழந்தைகள்,பெண்கள், முதியவர், மாற்றுத்திறனாளிகள் என சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
மேலும், நேர்த்திக் கடனை நிறைவேற்றிய பக்தர்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விசிக பிரமுகரை ரவுடி பட்டியலில் சேர்ந்த காவல் துறைக்கு எதிராக புகார்