நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போதமலை அடிவாரம் பட்டணம் பகுதியை சேர்ந்த பெரியணின் மகன் செலம்பன் (45). இவர் கிணறு தோண்டும் பணிகள் செய்து வந்தார்.
அதன்படி, கைலாசம் பாளையத்தில் அத்தியப்பனின் தோட்டத்தில் செலம்பன் 60 அடி ஆழமுள்ள கிணறு தோண்டும் பணியை கடந்த 5 நாள்களுக்கும் மேலாக செய்துவந்துள்ளார்.
மேலும் 5க்கும் மேற்பட்டோர் கிணறு வெட்டுவதற்காக அங்கு நாட்டு வெடிகள் வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிணற்றுக்குள் செலம்பன் எட்டிப் பார்த்தபோது, வெடி பொருளில் இருந்து வெளியான நச்சுவாயு தாக்கி மயக்க நிலையை அடைந்து, கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த செலம்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபாமக உயிரிழந்தார். இதையடுத்து தகவலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், செலம்பனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார்.
மேலும் இச்சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை