மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில், அண்ணா சிலை அருகிலுள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கருணாநிதியின் சாதனை விளக்கப் பதாகைகளை கைகளில் ஏந்தி தொண்டர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர். முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி, கடந்த 2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 94ஆவது வயதில் காலமானார்.
இதையும் படிங்க: தமிழ் என் உயிர் மூச்சு - வையகம் போற்றும் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள்