நாமக்கல் தாலுகாவுக்கு உட்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 792 வாக்குகளில், 3ஆயிரத்து 811 வாக்குகள் பதிவானது. இதில் 221 வாக்குகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.
அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 2 ஆயிரத்து 302 வாக்குகள் பெற்று வாங்கிலி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ரவி போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சீரங்கன் 2 ஆயிரத்து 400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுப்ரமணி 2 ஆயிரத்து 80 வாக்குகளும், துணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மயில் ஆனந்தன் 2 ஆயிரத்து 435 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு லாரி உரிமையாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த தேர்தலை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.