திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த வெங்கடாசம் (34) என்பவர் சரக்கு லாரியில் புதுச்சேரியிலிருந்து புண்ணாக்கு லோடு ஏற்றிக் கொண்டு காங்கேயத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் எதிர்பாராதவிதமாக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் பின்பக்கம் வரை சேதமடைந்தது. இதில் லாரி ஓட்டுநர் எவ்வித காயமும் இன்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நேற்று (டிச. 25) தான் ஏற்படுத்தப்பட்டன என்பதும், தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதற்கான எவ்வித முன் அறிவிப்பும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அங்கு வைக்கப்படாததால் விபத்து நேர்ந்தது தெரியவந்தது.
இருந்தபோதிலும், விபத்து நேர்ந்து பல மணி நேரமாகியும் லாரியை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த, காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன் வராததால் எந்த நேரத்திலும் லாரி கவிழும் நிலை இருப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர்.
இதையும் படிங்க...‘ஸ்கேட்டிங் தளம் அமையுங்கள்...அப்புறம் பாருங்க பதங்கங்கள் குவியும்’ இளம் வீரர்களின் குரலுக்கு செவி மடுக்குமா அரசு?