ETV Bharat / state

'தலைவரும் நாங்களே, துணைத் தலைவரும் நாங்களே' - நாமக்கல்லை தனதாக்கிய தங்கமணி! - மாவட்ட ஊராட்சி குழு தலைவர்

நாமக்கல்: மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

local body election
local body election
author img

By

Published : Jan 12, 2020, 11:10 AM IST

Updated : Jan 12, 2020, 1:12 PM IST

நாமக்கல்லில் அதிமுக ஆதிக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர், 15 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், 322 ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சாரதாவும், துணைத் தலைவராக அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரமும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.

ஒன்றியத் தலைவர்

இதேபோல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளைப் பொறுத்தவரை...

  1. நாமக்கல்,
  2. புதுசத்திரம்,
  3. எருமப்பட்டி,
  4. நாமகிரிபேட்டை,
  5. கொல்லிமலை,
  6. வெண்ணந்தூர்,
  7. பள்ளிபாளையம்,
  8. கபிலர்மலை,
  9. மோகனூர்,
  10. எலச்சிபாளையம்,
  11. மல்லசமுத்திரம் (சுயேச்சையாகப் போட்டியிட்ட அலமேலு என்பவர் அதிமுக ஆதரவுடன்...)

உள்ளிட்ட இடங்களில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வாகை சூடியுள்ளனர்.

  1. சேந்தமங்கலம்,
  2. ராசிபுரம்,
  3. திருச்செங்கோடு

ஆகிய மூன்று ஒன்றியங்களில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஒன்றியக் குழுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒன்றிய துணைத் தலைவர்

மாலையில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தேர்தலில்...

  1. நாமக்கல்,
  2. எருமப்பட்டி,
  3. கொல்லிமலை
  4. வெண்ணந்தூர்,
  5. பள்ளிபாளையம்,
  6. கபிலர்மலை,
  7. எலச்சிபாளையம்,
  8. நாமகிரிபேட்டை (பாமக),
  9. மோகனூர் (பாமக)

ஆகிய ஏழு இடங்களில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

  1. புதுசத்திரம்,
  2. சேந்தமங்கலம்,
  3. திருச்செங்கோடு

உள்ளிட்ட மூன்று இடங்களில் திமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றனர்.

ஒத்திவைப்பு

  1. ராசிபுரம்,
  2. மல்லசமுத்திரம்

ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் இவ்விரு இடங்களிலும் தேர்தலை அலுவலர்கள் ஒத்திவைத்தனர்.

பரமத்தியில் பரமபதம்

இதேபோல், பரமத்தி ஒன்றியக் குழுவில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தலா நான்கு இடங்களில் சம பலத்துடன் இருந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் நான்கு பேரும் மறைமுகத் தேர்தலில் பங்கேற்காததால் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி ஒத்திவைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

'அதிமுகவின் கோட்டை'

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, "நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி அதிமுகவின் கோட்டை என நிரூபித்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களைப் பகிர்ந்துகொண்டோம்" என்றார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்வு

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னை குறித்த கேள்விக்கு, அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என பதிலளித்தார். பரமத்தி ஒன்றியக் குழுத் தலைவருக்கான தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது குறித்து கேட்டபோது, 'அதிமுகவுக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தலை புறக்கணித்தது; விரைவில் அங்கு தேர்தல் நடைபெறும்' என தங்கமணி உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒன்றியச் செயலாளருக்கான தேர்தலை மீண்டும் நடத்த கோரிக்கை

Intro:நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சாராதாவும், துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி பி.ஆர்.சுந்தரமும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு Body:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணை தலைவர், 15 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர், 322 ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சாராதாவும், துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி பி.ஆர்.சுந்தரமும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதே போல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் தேர்தல்களை பொறுத்த வரை நாமக்கல், புதுசத்திரம், எருமப்பட்டி, நாமகிரிபேட்டை, கொல்லிமலை வெண்ணந்தூர், பள்ளிபாளையம், கபிலர்மலை, மோகனூர், எலச்சிபாளையம் ஆகிய 10 இடங்களில் அதிமுகவை சேர்ந்தவர்கள் தலைவர்களாகவும், சேந்தமங்கலம், இராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய 3 ஒன்றியங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் ஒன்றிய குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மல்லசமுத்திரம் ஒன்றிய குழு தலைவராக சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அலமேலு அதிமுக ஆதரவுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பரமத்தி ஒன்றிய குழுவில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் தலா 4 இடங்களில் சம பலத்துடன் இருந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் 4 பேரும் மறைமுக தேர்தலில் பங்கேற்கததால் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் நடத்துல் அலுவலர் மகேஸ்வரி ஒத்தி வைத்தார்.

மாலை நடைபெற்ற துணை தலைவருகான தேர்தலில் நாமக்கல், எருமப்பட்டி, கொல்லிமலை வெண்ணந்தூர், பள்ளிபாளையம், கபிலர்மலை, எலச்சிபாளையம் ஆகிய 7 இடங்களில் அதிமுகவை சேர்ந்தவர்களும், புதுசத்திரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு ஆகிய 3 இடங்களில் திமுக சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றனர். நாமகிரிபேட்டை, மோகனூர் ஆகிய இடங்களில் பாமகவை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் இராசிபுரம், மல்லசமுத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுகான துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க மேற்கண்ட ஒன்றியங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த உறுப்பினர்களும் பங்கேற்காத நிலையில் இவ்விரு இடங்களிலும் துணை தலைவர் தேர்தலை அதிகாரிகள் ஒத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்சார துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி அதிமுகவின் கோட்டை என நிரூபித்துள்ளதாகவும், அதிமுகவை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை பகிர்ந்து கொண்டதாகவும், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் அப்படி தான் இருப்பார்கள் எனவும், பரமத்தி ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது குறித்து கேட்ட போது அதிமுகவுக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தலை புறக்கணித்ததாகவும், விரைவில் அங்கு தேர்தல் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Jan 12, 2020, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.