ETV Bharat / state

திருமணிமுத்தாறு பாலத்தை கட்ட கோரி இடதுசாரி ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Oct 23, 2020, 12:25 PM IST

நாமக்கல்: திருமணிமுத்தாறு பாலத்தை விரைவாக கட்டகோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம், அகரம் வழியாக கொத்தம்பாளையத்தில் திருமணி முத்தாறு தரைபாலம் அமைந்தள்ளது. இந்த பாலம் வழியாகதான் கிராம மக்கள் சென்று வருகின்றனர். கருமகவுண்டம்பாளையம், கோக்கலை, படுவகாடு, எளையாம்பாளையம், குடித்தெரு, மேட்டுபாளையம், பெரியமணலி, புள்ளாச்சிபட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக, கொத்தம்பாளையத்தில் திருமணிமுத்தாறு பாலம் உள்ளது.

ஆண்டுதோறும் கனமழை பெய்யும் காலங்களில், ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் பாலம் தண்ணீரில் மூழ்கி விடும். இதனால் மாணவர்கள், பொதுமக்கள் பாலத்தை கடந்துச் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மின்துறை அமைச்சர் தங்கமணி தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிட ரூ.3.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டினார்.

அதன்பிறகு கட்டுமான பணிகள் தொடங்கின. ஓராண்டாகியும் இதுவரை தரைபாலத்தின் அடியில் பில்லர் குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன. மற்ற பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் திருமணிமுத்தாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பாலத்தை பயன்படுத்தி வந்த கிராம மக்கள், 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மலர்வளையம் வைத்து சங்கு ஊதி ஆற்றில் இறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ் கூறுகையில், "பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்கவேண்டும், தாமதித்தால் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.