ETV Bharat / state

மகனின் மருத்துவப் படிப்பிற்காக கடன் வாங்கிய தொழிலாளி: திருப்பி கட்டமுடியாததால் தற்கொலை முயற்சி - usury interest suicide attempt in namakkal

நாமக்கல்: மகனின் மருத்துவப் படிப்பிற்காக கடன் வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவர், திருப்பிக் கட்ட முடியாததால் விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

laborer-suicide-attempt
laborer-suicide-attempt
author img

By

Published : Jun 28, 2020, 10:00 AM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நெ.3 குமாரபாளையத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி கலைமணி. அவரது மகன் கவியரசு. இவர் சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துவருகிறார். மகனைப் படிக்க வைக்க கலைமணி மல்லூர் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், அதிக வட்டிக்கு கடனாகப் பணம் வாங்கியுள்ளார்.

தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால், அவரால் கடனை கட்ட முடியவில்லை. அதனால் கடன்கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக்கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால், விரக்தியடைந்த கலைமணி விஷம் அருந்திவிட்டு கடன் பிரச்னையால்தான் இந்த முடிவை எடுத்தேன் எனத் தெரிவித்து, வாட்ஸ்அப்பில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப் காணொலி

தகவல் அறிந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு மல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் ஆபத்தான நிலையிலிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெண்ணந்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் ஆட்டோ ஒட்டுநர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.