ETV Bharat / state

போட்டோ ஸ்டுடியோவை குறி வைக்கும் கும்பல்... டிஜிட்டல் கேமராக்கள் கொள்ளை!

author img

By

Published : Jan 28, 2021, 9:24 AM IST

நாமக்கல்: குமாரபாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டோ ஸ்டுடியோவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், டிஜிட்டல் கேமரா, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

நாமக்கல்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ், காந்திநகர் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நேற்றிரவு (ஜனவரி 27) வழக்கம் போல், கடையை பூட்டிவிட்டு வெங்கடேஷ் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், இன்று(ஜன-28) காலை, கடைக்கு வந்த வெங்கடேஷ் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்கையில், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புகைப்பட கேமரா, 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோனது தெரியவந்துள்ளது. அது குறித்த தகவலின் பேரில், காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அருகிலிருந்த நாகராஜ் என்பவரது ஸ்டுடியோவிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

போட்டோ ஸ்டுடியோவை குறி வைக்கும் கும்பல்

பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு இளைஞர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.