ETV Bharat / state

ஈவிகேஎஸ் இளங்கோவனை 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் - கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் - கமலஹாசன்

ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்
author img

By

Published : Jan 28, 2023, 10:31 AM IST

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன 27) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் பங்கேற்றார். இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் கொமதேக குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது. கொமதேக களப்பணியாற்றி கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்.

இரட்டை இலை சின்னத்தை பெற ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டு சின்னத்தை வாங்கினால் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நீர்த்து போகும் என்பதை புரிந்து கொண்டு ஈபிஎஸ் தவிர்த்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்பது ஏற்கனவே கணித்தது தான்.

காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்ற போது தெரிந்தது” என தெரிவித்தார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் பரளி, வளையப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள 220 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தாது என தமிழக அரசு தீர்க்கமாக இருக்கின்றது.

தொழில்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளார். விவசாயிகளின் ஒப்புதல் கருத்துக்கள் கேட்காமல் தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தக்கூடிய வேலைகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வாய்ப்பு கிடையாது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலை ஒரு சாக்கடை என்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.