நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பது கொல்லிமலை ஆகும். இங்கு மாசிலா அருவி, ஆகாய கங்கை, நம்ம அருவி மற்றும் அரப்பளீஸ்வரர் கோவில் ஆகியவை உள்ளதால் வெளியூரில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் குளிக்க வருவதுண்டு.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா மையங்களும் அருவிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக அனைத்து வயதினரும் குளிப்பதற்கு ஏற்ற இடமான மாசிலா அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவது, வெள்ளியை உருக்கி ஊற்றுவது போல் காட்சி அளிக்கிறது.
அருவிக்கு வர தடை நீடிப்பதால், அருவி பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டீஸ்வரர் கோயில் யானை இடமாற்றம்