ETV Bharat / state

நாமக்கல் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்கள் - கத்தி நடனம் என்றால் என்ன

நாமக்கல் மாவட்டம் ஒஸக்கோட்டை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு, இளைஞர்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Osakottai Sri sowdeshwarii Amman Temple Knife Festival, ஒஸக்கோட்டை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோயில் கத்திப்போடும் நிகழ்வு
Osakottai Sri sowdeshwarii Amman Temple Knife Festival
author img

By

Published : Feb 1, 2022, 6:39 AM IST

நாமக்கல்: அலங்காநத்தம் அடுத்துள்ள புதுக்கோட்டை கிராமத்தில் ஒஸக்கோட்டை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையை முன்னிட்டு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் உடலில் கத்தியால் கீறி நடனமாடி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.‌ இதனை உள்ளூர் மக்கள் கத்திப்போடும் நிகழ்ச்சி என்று அழைக்கின்றனர்.

அந்தவகையில், நேற்று (ஜன. 31) தை அமாவாசையை முன்னிட்டு கோயிலில் கத்திப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடலில் கத்திப்போட்டு நடனமாடினர்.

நாமக்கலில் கத்தியால் கீறி நடமானடி அம்மனை வழிபட்ட இளைஞர்கள்

இந்த திருவிழா ஜன.29ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஜன. 30ஆம் தேதி காலை மகாசண்டி ஹோம பூஜையும், அதனைத்தொடர்ந்து நேற்று(ஜன.31) கத்திப்போடும் நிகழ்வும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: தை அமாவாசை- ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.