ETV Bharat / state

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - நல்லசாமி

author img

By

Published : Jun 4, 2019, 11:54 PM IST

நாமக்கல்: பெட்ரோல், டீசல் விலையைப் போல காவிரி நீர் பங்கீட்டையும் தினசரி மத்திய அரசு மாநிலங்களுக்கு நிர்ணயம் செய்து பிரித்துத் தர வேண்டும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசியபோது, "நமது நாட்டின் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்காமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியாது. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது. இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. இந்த மொழியைக் கற்கக் கூடாது என யாரையும் குறை கூறவும் கூடாது. மொழிகளைக் கற்பது அவரவர் விருப்பம்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். பெட்ரோல் டீசல் விலையைத் தினசரி நிர்ணயம் செய்வது போல, கர்நாடகாவிலிருந்து காவிரியில் வரும் தண்ணீரைத் தினசரி பங்கு பிரித்துக் கொடுத்தால்தான் தமிழ்நாடு, கர்நாடகா தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு வரும். காவிரி கோதாவரி ஆறுகள் இணைப்பை கட்டாயம் செயல்படுத்தவேண்டும். தற்போது மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது. நீரின் தேவையையும் அதிகமாக உள்ளது. எனவே கோதாவரி காவிரி நதிகள் இணைப்பு அவசியமானதாகும். அதே போல் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்’ என்றார்.

Intro:காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி

Body:தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி என்று நாமக்கலில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் நமது நாட்டின் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்காமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியாது. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது. இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க கூடாது. அதேபோல் இந்த மொழியை கற்க கூடாது என யாரையும் குறை கூறவும் கூடாது. மொழிகளைக் கற்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

மேலும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து பேசிய நல்லசாமி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.பெட்ரோல் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது போல் கர்நாடகாவிலிருந்து காவிரியில் வரும்தண்ணீரை தினசரி பங்கேற்று பெற்றால்தான் தமிழகத்திற்கும் கர்நாடகம் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். காவிரி கோதாவரி ஆறுகள் இணைப்பு காலத்தின் கட்டாயம் என்றும் தற்போது மக்கள் தொகை பெருக்கம் ஏற்ப்பட்டுள்ளது.நீரின் தேவையையும் அதிகமாக உள்ளது. எனவே கோதாவரி காவிரி நதிகள் இணைப்பு அவசியமானதாகும்.அதே போல் தமிழகத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.