ETV Bharat / state

காதி கிராப்ட் பொங்கல் விற்பனை - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காதி கிராப்ட்  விற்பனையகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான பொருட்களின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

விற்பனையகத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ்
காதி கிராப்ட் பொங்கல் விற்பனை - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு
author img

By

Published : Jan 10, 2020, 2:48 PM IST

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பாக புதுப்பிக்கப்பட்ட விற்பனையகத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

இங்கு கதர், பாலியஸ்டர், பட்டு ரகங்கள் உள்ளிட்டவைகள் 30 சதவிகிதம் தள்ளுபடியும் கம்பளி ரகங்களுக்கு 20 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பொங்கல் சிறப்பு விற்பனையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

காதி கிராப்டின் சொந்த தயாரிப்பிலான குளியல் சோப்புகள், தேன், தோல் பொருட்கள், ஜவ்வாது, ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பொங்கல் விற்பனையை தொடங்கிவைத்தார்.

விற்பனையகத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் காதி கிராப்ட் விற்பனையகத்தில் இந்தாண்டு 80 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 67 லட்சம் ரூபாய் வரை விற்பனை இலக்கு எட்டியிருக்கின்றது.

ஆட்சியர் மெகராஜ் செய்தியாளர் சந்திப்பு

முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக டெபிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்!

Intro:நாமக்கல் காதி கிராப்ட்  விற்பனையகத்தில் பொங்கல் சிறப்பு விற்பனை தொடக்கம், இந்தாண்டு  80 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது வரை 67 லட்சம் அளவுக்கு விற்பனை இலக்கு எட்டியிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தகவல்

Body:நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பாக புதுப்பிக்கப்பட்ட விற்பனையாகும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையகத்தில் பொங்கல் சிறப்பு விற்பனையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ் இன்று தொடங்கி வைத்தார்.  இங்கு கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு  30 சதவீதம் தள்ளுபடியும் கம்பளி ரகங்களுக்கு  20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும்  எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காதி கிராப்ட்   சொந்த தயாரிப்பிலான குளியல் மற்றும் சலவை சோப்புகள் தேன், தோல் பொருட்கள், ஜவ்வாது, ஊதுபத்தி,கற்பூரம், சாம்பிராணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் குறைந்த விலையில் இங்கு  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பொங்கல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல்  காதிகிராப்ட் விற்பனையகத்தில்  80 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது வரை 67 லட்சம் அளவுக்கு விற்பனை இலக்கு எட்டியிருபதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த விற்பனையகத்தில் கடன் அட்டைகள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.