ETV Bharat / state

இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் - அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்
author img

By

Published : Sep 22, 2019, 7:33 PM IST

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் ரூ. 87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சத்துணவு மையம், மகளிர் சுகாதார வளாகம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் உள்ளிட்டவற்றை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

கட்டடங்களை திறந்து வைக்கும் அமைச்சர் தங்கமணி
கட்டடங்களை திறந்து வைக்கும் அமைச்சர் தங்கமணி

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ’நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும் என்றார். அப்போது இடைத்தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இடைத்தேர்தலில் அமமுக மற்றும் மக்கள்நீதி மய்யம் போட்டியிடாதது பயத்தை காட்டுகிறது.

ஆனால் அதிமுக எந்த தேர்தல் வந்தாலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று பதிலளித்தார். மேலும் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் தக்கல் முறையில் 40 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஐந்தாயிரம் மின் இணைப்புகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் உரிய கட்டணம் செலுத்துபவர்களுக்கு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார். நாங்குநேரி தொகுதியில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து சென்றார்.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் தங்கமணி

Intro:நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சர் தங்கமணி பரமத்திவேலூரில் 87 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்த பின் பேட்டி

Body:நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சர் தங்கமணி பரமத்திவேலூரில் 87 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்த பின் பேட்டியளித்தார்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சத்துணவு மையம், மகளிர் சுகாதார வளாகம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்ளிட்ட ரூ.87 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும் எனவும் இடைத்தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இடைத்தேர்தலில் அமமுக மற்றும் மக்கள்நீதி மய்யம் போட்டியிடாதது பயத்தை காட்டுகிறது ஆனால் அதிமுக எந்த தேர்தல் வந்தாலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும்  கடந்த மூன்று ஆண்டுகளில் தக்கல் முறையில் 40 ஆயிரம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டது எனவும் கடந்த ஆண்டு 5 ஆயிரம் மின்இணைப்புகள் மீதமுள்ளது எனவும் அதனை வருகின்ற அக்டோபர் 1 முதல் உரிய கட்டணம் செலுத்துபவர்களுக்கு மூப்பு அடிப்படையில் விரைவில் மின்இணைப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும்  நாங்குநேரி தொகுதியை பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.