ETV Bharat / state

'தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' - அமைச்சர் தங்கமணி! - Liquor is enforced in Tamil Nadu

நாமக்கல்: தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என மதுவிலக்குத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

In TN Liquor enforced -Minister Thangamani
author img

By

Published : Oct 25, 2019, 11:31 PM IST

நாமக்கல் மாவட்ட சமூகநலத் துறை சார்பாக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்று ஆயிரத்து 333 பயனாளிகளுக்கு 10 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள திருமண நிதி உதவி, தாலிக்குத் தங்கம் ஆகியவற்றை வழங்கினர்.

இதனையடுத்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி என்பது 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியேற்பார் என்றார்.

அமைச்சர் தங்கமணி செய்தியாளர் சந்திப்பு!
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயம் செய்து மதுபானங்கள் விற்கப்படுவதில்லை. படிப்படியாகத் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் குறைக்கப்பட்டு, மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கூறினார்.

Intro:டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயம் செய்து மதுபானங்கள் விற்கப்படுவதில்லை, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் - அமைச்சர் தங்கமணிBody:நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது எனவும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2021 பதவி ஏற்பார் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் பேட்டியளித்தார்.

நாமக்கல் மாவட்ட சமூகநலத்துறை சார்பாக திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் பங்கேற்று 1333 பயனாளிகளுக்கு 10 கோடியே 15 லட்சம் மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கினர் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி என்பது 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம் எனவும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவியேற்பார் என்றும் தெரிவித்தார் மேலும் அவர் கூறும்போது அதிமுகவில் சசிகலா உள்ளிட்ட யாருக்கும் இடம் கிடையாது எனவும் தமிழகத்தைப் பொருத்தவரை டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயம் செய்து மதுபானங்கள் விற்கப்படுவதில்லை எனவும் படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருவகவும் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் மூன்று மாதங்களுக்குள் பணி முடிவடைந்து மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் மருத்துவ கல்லூரி செயல்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார் இதற்காக 24 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.