நாமக்கல் அடுத்துள்ள பெரியபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பரமானந்தன்(60). இவருடைய மனைவி மயிலாத்தாள்(50). இவர்களுக்குத் திருமணமாகி ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். இதனிடையே கணவன் - மனைவி இருவருக்கும் அவ்வப்போது குடும்பத்தகராறு காரணமாக சண்டை வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு கணவன் - மனைவி இடையிலான சண்டை முற்றவே, பரமானந்தன் வீட்டருகே இருந்த கட்டையால், தனது மனைவியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மயிலாத்தாளை, அருகிலிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மயிலாத்தாள், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல் துறையினர், பரமானந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத் தகராறில் கணவனே, மனைவியைக் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மனு எடுத்துட்டு வரச் சொன்னா... விஷ பாட்டிலுடன் ஆட்சியரை சந்திக்க வந்த நபர்!