ETV Bharat / state

ஏசி, பிரிட்ஜ் வெடிப்புகளை தவிப்பதற்கான வழிமுறைகள்!

நாமக்கல்: சமீபகாலமாக அதிகரித்துவரும் ஏசி, பிரிட்ஜ் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி நாமக்கல் ஏசி மெக்கானிக் மற்றும் ஏர் கண்டிஷனர் தொழிலாளர் நலச் சங்கத்தின் செயலாளர் சுந்தரராஜன் விவரிக்கிறார்.

ac mechani
author img

By

Published : Jul 24, 2019, 5:59 PM IST

நம் வீட்டின் படுக்கை அறையில் இதமான குளிரும், பருகுவதற்கு குளிர்ந்த நீரும் கிடைப்பது என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. இப்படி மகிழ்வை கொடுக்கும் என நாம் வாங்கிப் பயன்படுத்தும் ஏசி, பிரிட்ஜ் போன்ற மின்னனு குளிர்சாதனப்பொருட்கள் வெடிப்பது தொடர்கதையாக உள்ளது.

ஏசி மற்றும் பிரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட விபத்துகள்:

தனியார் செய்தித் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்த பிரசன்னா தனது மனைவி மற்றும் தாயுடன் சென்னை சோலையூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி குடும்பத்தினருடன் வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் மின் கோளாறு காரணமாக வீட்டிலிருந்த பிரிட்ஜ் வெடித்ததில் மூன்று பேரும் மூச்சு திணறி மரணமடைந்தனர்.

Accident
பிரிட்ஜ் வெடித்ததால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் பிரசன்னா மற்றும் அவரது மனைவி

இதேபோன்று சென்னை போரூர் அடுத்த சக்தி நகரைச் சேர்ந்த பிரகாஷ் மேனன். இவர் குடும்பத்துடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏசியின் சுவிட்சை ஆஃப் செய்யாமல் ஒவ்வொருவரும் வெவ்வேறு அறைக்கு சென்றுள்ளனர். அப்போது ஏசியிலிருந்து வெளியேறிய வாயுவால் ஹால் முழுவதும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் தீக்காயங்களுடன் அந்த குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

பெரும்பாலான வீடுகளில் ஏசி இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் சமயலறையில் பிரிட்ஜ் இருக்கும். இவை வெடிக்குமா? தீப்பிடிக்குமா? வெடிக்கும் பொருளை வீட்டில் வைத்திருந்தால் எப்படி நிம்மதியாக தூங்கமுடியும் உள்ளிட்ட கேள்விகள் நம்முள் எழுகின்றன.

ஏசி மற்றும் பிரிட்ஜ் வெடிக்கக் காரணங்கள்:

இந்த மின்சாதனங்கள் வெடிப்பதற்கான காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் மற்றும் ஏர் கண்டிஷனர் தொழிலாளர் நலச் சங்கத்தின் செயலாளர் சுந்தரராஜன். தற்போது வரக்கூடிய ஏசி, பிரிட்ஜ் ஆகியவற்றில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில் இன்வெர்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல்கள் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொண்டாலும், அதிகளவில் வெடிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏசி, பிரிட்ஜ் வெடிப்பதற்கான காரணங்கள்

மேலும், பழைய மாடல்களில் CFC என்றழைக்கப்படும் வாயு பயன்படுத்தப்பட்டது. ஆனால் நவீன ரக மாடல்களாக வெளிவரும் ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ் ஆகியவற்றில் ஆர் - 600ஏ என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. மேலும் புதிய மாடல்களில் வாயுவின் அழுத்தம் 230 முதல் 240 வரை உள்ளது. அழுத்தம் அதிகமாக இருந்தும் பழைய மாடல்களிள் குழாய்களே புதிய மாடல்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

வாயு அழுத்தத்திற்கு ஏற்ப கேஸ் குழாய் இருக்க வேண்டும். பழைய மாடல்களில் கேஸ் அடைப்பு ஏற்பட்டால் கம்ப்ரசர் சூடாகி ட்ரிப் ஆகிவிடும். ஆனால் தற்போதைய மாடல்களில் குழாயின் எந்த பகுதி வீக்காக இருக்கிறதோ அந்த இடத்தில் வெடித்து தீப்பிடித்து எரிகிறது. எவ்வளவு வாயுவை அடைக்க வேண்டும் என அந்த பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனம் பரிந்துரைக்கிறதோ அவ்வளவுதான் அடைக்கவேண்டும். குளிர் சாதன பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவையும் தாண்டி வாயுவை அடைப்பது விபத்துக்குக் காரணம்.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் அந்த பொருட்களை பழுது பார்க்கும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுவதில்லை என்பதும் ஒரு காரணமாக உள்ளது. இவை எல்லாம் விபத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. மின் கசிவு ஏற்பட்டு மின் விநியோகம் சீரற்ற நிலையில் இருந்தாலும் மின்சாதன பொருட்கள் பழுதுடையும் வாய்ப்பு அதிகம். ஆகவே மின் விநியோகம் சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். இவற்றையெல்லாம் முறையாக கண்காணித்து கடைபிடித்து வந்தால் விபத்திலிருந்து தப்பலாம்.

விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்!

ஏசி மற்றும் பிரிட்ஜ் ஆகியவை வைத்துள்ள இடத்திற்கு காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். அதேபோல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக ஏசி மற்றும் பிரிட்ஜை சர்வீஸ் செய்யவேண்டும். சர்வீஸ் செய்யாமல் இருந்தால் அதில் தூசிகள் அதிகமாக சேர்ந்துவிடும். ஒரு மணி நேரத்தில் கூலாக வேண்டிய அறை இரண்டு மணி நேரத்தில் கூலாகும்.

செயல்முறை விளக்கம் அளிக்கும் சுந்தரராஜன்

இதனால் அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் விரைவில் மோட்டார் சூடாகிறது. அறையை முழுமையாக காற்றோட்டம் இல்லாமல் அடைக்காமல் சிறு காற்றோட்டம் இருக்குமாறு இடைவெளி விட்டு இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏசி மற்றும் பிரிட்ஜை சர்வீஸ் செய்வதற்கு பணியாட்கள் உள்ளே சென்றுவர போதிய இடம் விடவேண்டும்.

கைத்தேர்ந்த டெக்னீசியன் வைத்தே சர்வீஸ் செய்யவேண்டும். ஏனெனில் ஒருசிலர் கவனக் குறைவினால் ஏசி மற்றும் பிரிட்ஜில் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக வாயுவை செலுத்துவதால் வெடித்து விபத்து ஏற்படுகிறது. குறை இல்லாமல் இணைப்புகள் கொடுத்து ஏசி மற்றும் பிரிட்ஜ் பயன்படுத்தினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கவலை இல்லாமல் கையாளலாம் என்கிறார் இவர்.

Intro:Body:

AC and Bridge Regulation 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.