ETV Bharat / state

ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பில் காவல் துறையினருக்கு மாத்திரைகள் - namakkal latest news

நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துறையினர், அவர்களது குடும்பங்களுக்கு ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பில் இலவசமாக ஆர்சனிக் ஆல்பம்-30 மாத்திரைகள் வழங்கப்பட்டன.

காவல்துறையினருக்கு மாத்திரைகள்
காவல்துறையினருக்கு மாத்திரைகள்
author img

By

Published : Apr 26, 2020, 3:26 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

காவல் துறையினருக்கு மாத்திரைகள்

அதன் ஒரு பகுதியாகக் காவல் துறையினருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் மாவட்ட ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பில் மாத்திரைகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, காவல் துறையினர், அவர்களது குடும்பத்திற்கு இலவசமாக ஆர்சனிக் ஆல்பம் -30 என்னும் மாத்திரைகள் வழங்கினார்.

அதில் ஹோமியோபதி மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், கரோனா தடுப்புப் பணிகளில் பணியாற்றும் காவல் துறையினருக்கு நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட மாத்திரைகள் வழங்குவது பயன் உள்ளதாக அமையும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பாதித்தவர்களை ஒதுக்காமல் இயல்பாக நடத்துங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.