கடந்த வாரங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், இன்று (டிச.12) அதிகாலை முதலே நாமக்கல், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் மூடு பனி பெய்து வருகிறது. காலை 9 மணி வரை இந்த பனி பொழிவு நீடித்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே மூடங்கியுள்ளனர்.
அதேபோல் நெடுஞ்சாலைகளில் செல்லும் சிறிய வாகனம் முதல் கனரக வாகனம் வரை அனைத்தும் குறைவான வேகத்தில், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே மெதுவாக இயக்கப்பட்டன.
இதனால், இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நாமக்கல், வளையப்பட்டி புதன்சந்தை, புதுசத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கடும் பனி பொழிவு காணப்பட்டது.
இதையும் படிங்க: 'குறைந்தபட்ச வெப்பநிலை இவ்வளவா?' - பனி விழும் தமிழ்நாடு