ETV Bharat / state

பள்ளி வளாகத்திலிருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்ற தலைமை ஆசிரியர்! - அனுமதியின்றி மரங்களை வெட்டிய தலைமையாசிரியர்

நாமக்கல்: பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் தலைமை ஆசிரியரே வெட்டி விற்பனை செய்துள்ளனர்.

வெட்டப்பட்ட மரங்கள்
வெட்டப்பட்ட மரங்கள்
author img

By

Published : Jul 23, 2020, 9:54 PM IST

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கே தலைமையாசிரியராக பால் ஆரோக்கியம் பணியாற்றிவருகிறார்.

பள்ளி வளாகத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஒன்பது தேக்கு மரங்கள், 60 ஆண்டுகள் பழமையான 3 வேப்ப மரங்கள் உள்ளன.

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி திறக்கப்படாத நிலையில், பள்ளி வளாகத்தில் இருந்த வரங்களை விடுமுறை சமயத்தை பயன்படுத்தி பால் ஆரோக்கியம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் 5 இலட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை யாருக்கும் தெரிவிக்காமல் சட்ட விரோதமாக வெட்டி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அனைத்து துறை அலுவலர்களிடமும் நாமக்கல் மக்களவை உறுப்பினரிடமும் புகார் அளித்தனர். இதன் பேரில் பள்ளிக்கு வந்த நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ், சேந்தமங்கலம் வட்டாட்சியர் ஜானகி, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர் வெட்டப்பட்ட மரங்களின் நிலை குறித்து ஆய்வு ஆய்வு செய்தனர்.
அதன்பின் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். வெட்டபட்ட மரங்களை திரும்ப பள்ளிக்கே கொண்டு வரவும், அதனை மதிப்பீடு செய்து அபராதம் விதிக்கவும் தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் அந்தந்த துறை அலுவலர்களுக்கு மக்களவை உறுப்பினர் அறிவுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.