ETV Bharat / state

குமாரபாளையம்: வீடு திரும்பிய காவிரிக் கரையோர பொதுமக்கள்! - நாமக்கல் அருகே குமாரபாளையம்

நாமக்கல் அருகே குமாரபாளையத்தின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காவிரியாற்றில் வெள்ளம் குறைந்ததைத்தொடர்ந்து மகிழ்ச்சியுடன் முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.

காவிரி
காவிரி
author img

By

Published : Aug 7, 2022, 6:25 PM IST

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் தெரு, கலைவாணி தெரு, குள்ளங்காடு, மேட்டுக்காடு உள்ளிட்டப் பகுதிகளைச்சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததைத்தொடர்ந்து, மீண்டும் வீடு திரும்பி வருகின்றனர்.

முன்னதாக, காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீர் குமாரபாளையப்பகுதி கரையோர மக்களின் வீடுகளை சூழ்ந்திருந்தது. இதனையடுத்து காவிரிக் கரையோர குடியிருப்புகளில் சிக்கித்தவித்த, 347 குடும்பத்தினரினை வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மீட்டு, நகராட்சி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இவர்களுக்கு அத்தியாவசியத்தேவைகளை செய்து கொடுத்தல், முகாமில் மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல் உள்ளிட்டப்பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து, 1லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டதை அடுத்து இன்று (ஆக.7) காவிரியில் வெள்ளம் சற்று குறைந்து வருகிறது. இதனால், மணிமேகலை வீதி மற்றும் கலைமகள் தெரு உள்ளிட்ட குடியிருப்புப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு சில பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப்பகுதிகளுக்குத்திரும்பியுள்ளனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமாரபாளையம்: வீடு திரும்பிய காவிரிக் கரையோர பொதுமக்கள்!

இதையும் படிங்க: ஏரி மேய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் குண்டுக்கட்டாக கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.