ETV Bharat / state

தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா! - graduation day

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர். சூரப்பா மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழா
author img

By

Published : Aug 17, 2019, 11:13 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். சூரப்பா கலந்துகொண்டு 974 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், 'தமிழ்நாடு அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் உயர்கல்வி பயின்று வருகின்றார். நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் உயர் கல்வி, ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடுவோர்களின் சதவீதம் குறைவாக உள்ளது. இதனை மாற்ற அதிகளவு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதோடு, ஆராய்ச்சி படிப்பிலும் ஈடுபட வேண்டும். படித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என இளம் தலைமுறையினர் மனம் தளரக்கூடாது, அவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொண்டால் நிச்சயம் வேலை கிடைக்கும்.

மாணவிகளுடன்  துணை வேந்தர் டாக்டர். சூரப்பா

தொடர்ந்து பேசிய அவர், ‘படித்த அனைவரும் வேலைக்கு செல்பவர்களாக இல்லாமல் தொழில் முனைவோர்களாக மாறி பலருக்கு வேலை தருபவர்களாக மாற வேண்டும். அரசும் இதற்கு பலவகைகளில் உதவி செய்வதோடு, இளம் தொழில் முனைவோர்களுக்கு அதிகளவு தொழில்நுட்ப உதவிகள், கடனுதவிகளை வழங்கி வருகிறது. அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த 20 வருடங்களில் இணைய வசதி உலக அளவில் பல்வேறு மாற்றங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாகவும், இன்னும் பல மாற்றங்களையும் வருங்காலங்களில் தொடர்ந்து உருவாக்கும்' என பேசினார்.

Intro:இளைஞர்கள் வேலைகளை தேட கூடாது மற்றவர்களுக்கு வேலைகள் வழங்க வேண்டும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சூரப்பாBody:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர். சூரப்பா கலந்து கொண்டு 974 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது தமிழக அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் உயர்கல்வி பயின்று வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பெரும் பங்கு வகிப்பதாகவும், ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உயர் கல்வி, ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடுவோர்களின் சதவீதம் குறைவாக உள்ளதாகவும், இதனை மாற்ற அதிகளவு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதோடு, ஆராய்ச்சி படிப்பிலும் ஈடுபட வேண்டும் எனவும், படித்தவுடன் வேலை கிடைக்க வில்லை என இளம் தலைமுறையினர் மனம் தளரக்கூடாது என்றும், அவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்தி கொண்டால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்றும், படித்த அனைவரும் வேலைக்கு செல்பவர்களாக இல்லாமல் தொழில் முனைவோர்களாக மாறி பலருக்கு வேலை தருபவர்களாக மாற வேண்டும், இதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அரசும் இதற்கு பலவகைகளில் உதவி செய்வதோடு, இளம் தொழில் முனைவோர்களுக்கு அதிகளவு போதிய தொழில்நுட்ப உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கி வருவதாகவும், கடந்த 20 வருடங்களில் இணைய வசதி உலக அளவில் பல்வேறு மாற்றங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாகவும், இன்னும் பல மாற்றங்களையும் வருங்காலங்களில் தொடர்ந்து உருவாக்கும் எனவும் பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.