ETV Bharat / state

தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசுப்பள்ளி!

நாமக்கல்: அழகுநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு மாணவர்களுடன் மூடு விழாவை நோக்கிச் சென்ற அரசு பள்ளியில் தற்போது 73 மாணவர்கள் படித்துவருகின்றனர்.

government-school
author img

By

Published : Jul 17, 2019, 8:43 PM IST

நாமக்கல் அழகுநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் 2 மாணவர்கள் மட்டுமே படித்தனர். இதனால் அந்தப் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, ஆசிரியை மஞ்சுளா ஆகியோர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

ஆங்கில வழியில் கல்வி கற்று கொடுப்பதாகவும், இதற்கு முன் தான் பணியாற்றி பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் வீடியோக்களை பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியை காட்டி, குழந்தைகளை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.

அழகுநர் ஊராட்சி
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப்பள்ளி

இதனையடுத்து, தலைமை ஆசிரியையின் மீது நம்பிக்கை வைத்து பல பெற்றோர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்த தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர். இதன் காரணமாக கடந்த கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்தது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறந்தவுடன் மீண்டும் பெற்றோர்களை சந்தித்து பள்ளியின் சிறப்புகளை ஆசிரியர்கள் விளக்கினார்கள்.

இதனால் மேலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தற்போது இந்தப் பள்ளியில் 37 மாணவர்கள், 36 மாணவிகள் என மொத்தம் 73 பேர் பயின்று வருகிறார்கள். 2 மாணவர்கள் மட்டும் படித்து வந்த பள்ளியில் இன்று 73 குழந்தைகள் படிக்கிறார்கள்.

மேலும், இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கைத்தேர்ந்தவர்களாக உள்ளனர். ஆங்கிலத்தில் பாட புத்தகங்கள் படிப்பதின்றி ஆங்கில நாளிதழ்களையும் சரளமாக வாசித்து காட்டுகின்றனர். அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அளவிற்கு இப்பள்ளி அமைந்துள்ளது.

அழகுநர் ஊராட்சி
ஆங்கில நாளிதழ் வாசிக்கும் மாணவி

Intro:2 மாணவர்களுடன் மூடு விழாவை நோக்கி சென்ற அரசு பள்ளி 73 மாணவர்களுடன் தனியார் பள்ளிக்கு இணையாக தரத்தை மேம்படுத்திய பள்ளி ஆசிரியர்கள்

Body:நாமக்கல் அழகுநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில் 2 மாணவர்கள் மட்டுமே படித்தனர். இதனால் அந்த பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, ஆசிரியை மஞ்சுளா ஆகியோர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டனர். ஆங்கில வழியில் கல்வி கற்று கொடுப்பதாகவும், இதற்கு முன் தான் பணியாற்றி பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் வீடீயோக்களை பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியை காட்டி, குழந்தைகளை அனுப்பும் படி கேட்டுக் கொண்டார். தலைமை ஆசிரியையின் மீது நம்பிக்கை  வைத்து பல பெற்றோர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்த தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில்  சேர்த்தனர். இதன் காரணமாக கடந்த கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறந்த உடன் மீண்டும் பெற்றோர்களை சந்தித்து பள்ளியின் சிறப்புகளை ஆசிரியர்கள் விளக்கினார்கள். இதனால் மேலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தற்போது இந்த பள்ளியில் 37 மாணவர்கள், 36 மாணவிகள் மொத்தம் 73 பயின்று வருகிறார்கள்.    2 மாணவர்கள் மட்டும் படித்து வந்த பள்ளியில் இன்று 73 குழந்தைகள் படிக்கிறார்கள். மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கைத்தேர்ந்தவர்களாக உள்ளனர். ஆங்கிலத்தில் பாடபுத்தகங்கள் படிப்பதின்றி ஆங்கில நாளிதழ்களையும் சரளமாக வாசித்துகாட்டுகின்றனர். அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அளவிற்கு இப்பள்ளி அமைந்துள்ளது.

    துவக்கத்தில் இந்த பள்ளியின் தலைமையாசிரியராக பொறுப்பேற்கும் பொழுது இந்த பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே இருந்ததாகவும், இதனை மாற்றி பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்ற தொடர்ந்து பாடுபட்டு வருவதோடு இங்கு பள்ளியிலும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை விட சிறந்தவர்களாக உருவாக்கி வருவதாகவும், துவக்கத்தில் பெற்றோர்களிடம் அச்சம் இருந்ததாகவும், அரசு பள்ளியில் பயின்றால் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் இல்லாமல் போய்விடும் எனவும் பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால் தற்போது தங்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்டு தற்போது நல் ஆதரவு அளித்து வருவதாகவும், இவ்வாண்டு பல தனியார் பள்ளியில் இருந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தங்களது பள்ளியில் சேர்த்துள்ளதாகவும், இப்பள்ளியை வருங்காலத்தில் மாநிலத்தில் முன்மாதிரி பள்ளியாக மாற்றுவது இலட்சியம் என்கிறார் பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி.

 தனியார் பள்ளியில் படித்த தங்களின் பிள்ளைகளை இந்த அரசு பள்ளியில் சேர்த்ததன் மூலம் சிறந்த கல்வியை பெறுவதோடு, வருங்காலத்தில் சிறந்த மாணவர்களாக உருவாக இது அடித்தளம் இடும் என்றும், இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அர்பணிப்பு உணர்வோடு சிறந்த முறையில் கல்வி கற்று தருவதாகவும் முன்பு பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகள் அழுதபடியே செல்வது வழக்கம். ஆனால் தற்போது பிள்ளைகள் தாங்களாகவே முன்வந்து பள்ளிக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர் எனவும் இதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி காரணம் எனவும் கூறுகின்றனர் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆனந்தி மற்றும் ஹாஜிராபானு.

தான் இப்பள்ளியில் சேருவதற்கு முன்பு சாலையில் விளையாடிக்கொண்டிருந்ததாகவும் அப்போது பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி தங்களது பெற்றோரிடம் பள்ளியில் சேர்க்கும்படி வற்புறுத்தியதாகவும் தனது பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்க்க மறுத்த நிலையில் தான் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தலை கண்டு அடம் பிடித்து இப்பள்ளியில் சேர்ந்து பயில்வதாகவும், தனியார் பள்ளியை விட சிறப்பாக கற்று தருவதாகவும் தனக்கு இந்த பள்ளி மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறுகிறார் பள்ளி மாணவன் ஜீவானந்தம்.

 இங்குள்ள ஆசிரியர்கள் நண்பர்கள் போல் பழகி பாடத்தில் சந்தேகங்களை போக்கி சிறப்பாக கற்று தருவதாகவும் அனைத்து வகையான போட்டிகளிலும் ஆசிரியர்கள் முன்னுரிமை அளிப்பதாகவும் நீட் தேர்விற்கு கூட அச்சமின்றி எழுதுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மாணவி ஜெசிகா.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.