நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. கோழிப்பண்ணை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்துவரும் இவர், இன்று வழக்கம்போல் வெளியே சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். உள்ளேசென்ற அவர், வீட்டின் பின்புறம் ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார்.
பின்னர் உடனே பீரோவைச் சென்று பார்த்தபோது, அதிலிருந்த 22 சவரன் தங்கநகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்தார். இதைத்தொடர்ந்து, நல்லிப்பாளையம் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் விமானப் பயணம் - பைக்கில் வரும்போது சிக்கிய கொள்ளையர்!