தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியே வந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும்; அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் இன்று (மே. 30) வரை, அவசியமின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், கார் என சுமார் 1,956 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் முகக்கவசம் அணியாமல் இருப்பது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது, தேவையின்றி வெளியே வருவது போன்ற செயல்களுக்காக கடந்த ஒரு வாரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் 15 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என்று முதலமைச்சர் இருக்கக் கூடாது' டிடிவி!