நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தினசரி முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தான் நிர்ணயம் செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 29) முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையினை 5 ரூபாயிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்களிடம் கேட்ட போது, “தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் முட்டையின் தேவை குறைந்துள்ளதாகவும், அதே போல் பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மேலும் விலை குறையலாம் ” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொருளாதார வளர்ச்சிக்கு மூலதன சந்தைகள் பெரும்பங்கு வகிக்கின்றன: செபி தலைவர்